Type Here to Get Search Results !

உடல் நலம் 5

 இடது கற்றைத் துடிப்புத்தடை

இதயத் துடிப்புத் தடைகளால் நோயாளிக்குத் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும் ; தலைசுற்றும் ; குறுமயக்கம் ( Syncope ) , நெடுமயக்கம் ( Unconciousness ) , நெஞ்சுப் படபடப்பு ( Palpitation ) முதலிய அறிகுறிகள் தோன்றும் . இதய மின்னலை வரைபடத்தில் இதற்குரிய அலைமாற்றம் தெரியும் .

இதயமுடுக்கிக் கருவி
இதயத் துடிப்புத் தடைகளுக்கு நிரந்தரமாகத் தீர்வுகாண இதயமுடுக்கிக் கருவி பயன்படுகிறது .

செயற்கை இதயமுடுக்கிக் கருவி ( Artificial Pacemaker )
இதயத் துடிப்பை முறைப்படுத்துவதற்கு இதய முடுக்கிக் கருவி செயற்கை யாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இதில் இரண்டு பகுதிகள் உள்ளன : 1. மின் விசையைத் தரும் பகுதி 2. மின் இணைப்புக் கம்பி . மின்விசையை உற்பத்தி செய்யும் பகுதியில் ஒரு பேட்டரி இருக்கும் . இது மின்தூண்டல்களை ஏற் படுத்தும் . இதிலிருந்து மின் இணைப்புக் கம்பி ஒன்று அல்லது இரண்டு கிளம்பும் . இந்தக் கருவி மிகச் சிறியது . 5 செ.மீ. அகலமும் , ஒரு செ.மீ. கனமும் , 30 கிராம் எடையும் கொண்டிருக்கும் . பல வடிவங்களில் இது கிடைக்கிறது .
இதயத் துடிப்புக் குறைபாடுகளைத் தொடர் மின்னலைக் காட்சிப் பெட்டியில் தோன்றும் அலைமாற்றங்களைக் கொண்டு அறியலாம் . இக்கருவியை நோயாளியின் தேவைக்கேற்பத் தற்காலிகமாகவும் நிரந்தர மாகவும் உடலில் பொருத்திக் கொள்ளலாம் . 7.6.

தற்காலிக இதய முடுக்கிக் கருவி ( Temporary Pacemaker )
 இக்கருவி உடலின் வெளிப்பக்கத்தில் இருக்கும் . அதிலிருந்து புறப்படும் மின் இணைப்புக் கம்பியைக் காரையடிச்சிரை ( Subclavian Vein ) வழியாகவோ , தொடைச்சிரை ( Femoral vein ) வழியாகவோ இதயத்திற்குச் செலுத்துவார்கள் . கருவியிலிருந்து புறப்படும் மின்தூண்டல் இதயத் துடிப்பை சரிப்படுத்தும் .

நிரந்தர இதய முடுக்கிக் கருவி ( Permanent Pacemaker )
இக்கருவியை மார்பின் மேற்புறத்தில் , காரை எலும்பிற்கு ( Clavicle ) அருகில் , சிறிய அறுவைச் சிகிச்சை செய்து அதிக ஆழம் இல்லாதபடி புதைத்து , தோலைத் தையல் போட்டு மூடிவிடுவார்கள் . மின் இணைப்பு வயரைக் கழுத்துச் சிறை ( Carotid vein ) வழியாக இதயத்திற்குள் செலுத்தி , இதயத்தசைகளின் மீது நன்றாகப் படும்படி இணைப்பார்கள் .
இதயமுடுக்கி ஒரு கடிகாரத்தைப் போல் இயங்குகிறது . இதில் இதயம் எத்தனை முறைத் துடிக்க வேண்டும் என முறைப்படுத்தப் பட்டிருக்கும் . கருவி இயங்கத் துவங்கியதும் , குறிப்பிட்ட இடைவெளியில் மின்தூண்டல் கிளம்பி இதயத்தை அடையும் . இதனால் இதயம் துடிக்கும் . இதய முடுக்கியிலிருந்து மின் தூண்டல் குறிப்பிட்ட அளவில் இதயத்திற்குச் சென்றுகொண்டே இருப்பதால் இதயம் தொடர்ந்து துடிக்கிறது . நோயாளியின் தேவைக்கேற்ப இதயத் துடிப்பின் வேகத்தை வெளி யிலிருந்தே மாற்றியமைக்கவும் இக்கருவியில் வசதியுள்ளது . இதன் மூலம் நோயாளிக்கு எப்போதும் இதயத் துடிப்புத் தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் . ஒருமுறை பொருத்தப்படும் இதயமுடுக்கிக் கருவி குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு நல்ல நிலைமையில் இயங்கும் . அதற்குப் பிறகு புதிய கருவியைப் பொருத்திக் கொள்ள வேண்டும் .

உயர் இரத்த அழுத்தம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை ' உயர் இரத்த அழுத்தம் ' ( Hypertension ) என்றொரு நோய் இருப்பதை உலகில் எவரும் அறிந்திருக்க வில்லை . பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் வரை உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறியும் முறை எதுவுமில்லை . மருத்துவரிடம் வழக்க மான உடற்பரிசோதனை செய்து கொள்ள வருகின்றவர்களின் உயர் இரத்த அழுத்தத்தை அளக்க ' இரத்த அழுத்தமானி ' ( Sphygmomanometer ) என்னும் கருவி 1898 - ல் கண்டுபிடிக்கப்பட்டது . முதல் உலகப்போர் ( 1914-1918 ) முடிந்த பின்னர்தான் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறியப்பட வேண்டிய முக்கியத்துவம் உணரப்பட்டது . இன்று மேற்கத்திய நாடுகளில் இதய நோய்க்கும் பக்கவாதத்திற்கும் முக்கியக் காரணம் உயர் இரத்த அழுத்தம்தான் என்று ஆணித்தரமாகக் கூறு கிறார்கள் . மாரடைப்புக்கும் சிறுநீரகச் செயலிழப்புக்கும் உயர் இரத்த அழுத்தமே காரணமாக அமைவதை நிரூபித்துள்ளனர் . அது மட்டுமின்றி , 65 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களின் மரணத்திற்கு 50 சதவீதக் காரணம் இந்த உயர் இரத்த அழுத்தம்தான் என்று அறியப்பட்டுள்ளது . ஆண்டு தோறும் ஆண்களில் 37 சத வீதமும் , பெண்களில் 51 சதவீதமும் உயர் இரத்த அழுத்தத்தால் இறக்கிறார்கள் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று அண்மையில் புள்ளிவிவரம் தந்துள்ளது . உலகில் 100 பேருக்கு 16 முதல் 18 பேர் வரை உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளி விவ ரங்களின் ஒருமித்தக் கணிப்பு ஆகும் . இந்தியாவில் நகர்ப்புறங்களில் 1000 ஆண்களில் 60 பேருக்கும் , 1000 பெண்களில் 70 பேருக்கும் , கிராமப்புறங்களில் 1000 ஆண்களில் 35 பேருக்கும் , 1000 பெண்களில் 36 பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது

Post a Comment

0 Comments