பற்களைப் பாதுகாக்க .. ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து இத்துடன் சுக்கு , ஓமம் , இஞ்சி இவைகளையும் பொடி செய்து கலந்து பற்பொடி உபயோகித்து வர பற்களில் எந்தத் தொந்தரவு ஏற்படாது . பற்கள் பனிச்சிடும் .
வயிறு , தொப்பை பெரிதாகி விட்டதா ? சிலருக்கு வயிறு பானை போல் பெருத்து இருக்கும் . இவர்கள் தினசரி அதிக அளவு வாழைத் தண்டுச் சாப்பிட்டுவர வயிறு சுருங்கும் . தயிர் , மோர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் . உடற்பயிற்சி செய்து வர வேண்டும் .
குழந்தை விரல் சூப்புகிறதா ? ஹோமியோபதி மருத்துவமுறையில் வீரியப்படுத்தப்பட்ட சாப்பாட்டு உப்பை அரை அவுன்ஸ் வெந்நீரில் கலந்து இரண்டு சொட்டுகள் வீதம் சில வாரங்கள் உள்ளுக்குக் கொடுத்து வர குழந்தை விரல் சூப்பும் பழக்கத்தைத் தானே நிறுத்தி விடும் .
தாய்ப்பால் பெருக ... குழந்தைக்கு பால் கொடுக்கும் முன் பொறுக்கும் சூட்டில் ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள் . வாரம் ஒருமுறை பிள்ளைச் சுறாமீன் வாங்கி குழம்பு வைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும் .
அஜீரணத்துக்கு .... சீரகம் , இஞ்சி , கறிவேப்பிலை இவற்றைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது நீர் சேர்த்துக் குடிக்க அஜீரணம் குணமாகும் .
சாதாரண இருமலுக்கு .... எலுமிச்சம்பழச்சாறு , தேன் , கிளிசரின் மூன்றையும் சம அளவு கலந்து தினமும் மூன்று வேளை ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு விழுங்க இருமல் குணமாகும்
தாழம்பூ தைலம் தலைவலி , வாதவலி முதலியவற்றை கட்டுப்படுத்தும் , காதில் இரண்டு சொட்டுக்கள் விட காதுவலி மறையும் .
தாழம்பாயின் மகத்துவம் தாழம்பாயில் படுத்தால் பித்த தோஷங்கள் நீங்கும் . பாண்டு ரோகம் குணமாகும் . தலைச்சுற்றல் இருக்காது . மூத்திர நோய்கள் விலகும் .
தளர்ச்சி நீங்க .... அரசு ஆண்மை தரும் . அரசம் பழத்தை உலர்த்தி சூரணித்து தினமும் இரவில் 15 கி அளவு பாலில் அருந்த விந்து கட்டும் . ஆண்மை ஊக்கம் பெறும் ,
ஓரிதழ் தாமரை என்ற மூலிகை தங்கபஸ்பத்திற்கு சமமானது . இதனை அரைத்து நெல்லிக்காயளவு தினமும் இரவில் பாலில் கலந்து பருக தாது விருத்தி ஏற்படும் .
செம்பருத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டுக் காய்ச்சி , பால் , சர்க்கரை சேர்த்துப் பருகி வர உணர்வும் உற்சாகமும் கரை புரண்டு ஓடும் .
முருங்கைப் பிசினை உலர்த்தி பொடித்து , முருங்கை விதைப் பொடியுடன் சம அளவு கலந்து வைத்துக் கொண்டு தினமும் பாவில் 10 கிராம் கலந்து அருந்தி வர உறவு இன்பமுற விளங்கும் .
தூதுவளைக் கீரையை நெய்விட்டு வதக்கி சுவைக்கு உளுந்தம்பருப்பு , கொத்துமல்லி , கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வர ஏழு நாள்களில் நல்ல பலன் கிடைக்கும் ,
இயற்கை இனிப்புகளுக்கு விந்து சக்தியை பெருக்கும் சக்தி உண்டு . இரவு சாப்பாட்டுக்கு மூன் தேங்காய் , வாழைப்பழம் , பேரீச்சம்பழம் கவந்து சாப்பிடுவது நல்லது .
தேன் , முளைகட்டிய பயிறு , முளை கட்டிய கோதுமை , இளநீர் இவற்றை தினசரி உணவில் சேர்த்து பவன் பெறலாம் .
பன்னீர் திராட்சையை அரை தம்ளர் எடுத்து அது மூழ்கும் வரை நீர் ஊற்றி சிறிது நேரம் ஊறிய பின் பிழிந்து அதே அளவு காய்ச்சிய பசும்பால் கலந்து இரவு உறங்கப் போகும் முன் தொடர்ந்து பருக நல்ல பலன் கிடைக்கும் .
உடல் நலம் 4
April 01, 2021
0
Tags