Type Here to Get Search Results !

ஒரு துறவியும், அவருடைய சீடரும்

ஒரு துறவியும், அவருடைய சீடரும் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் .

அந்த நேரத்தில் வெகுதூரத்தில், ஒரு புலி உருமுவதும் ,அது அவர்களை நோக்கி வருவதும் தெரிந்தது.

உடனே சீடன் " குருவே புலி நம்மை நோக்கி வருவது போல் உள்ளது .

அதனால் நாம் திரும்பி வேறு பாதை வழியாக போய் விடுவோம் " என்றான்.

 ஆனால் குரு சீடரின் வார்த்தையை கேட்கவில்லை . "புலி நம்மை ஒன்றும் செய்யாது " என்று சீடனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார் .

சீடனையும் தியானம் செய்யுமாறு கூறினார்.   குருவின் பேச்சை தட்ட முடியாத சீடனும்,  அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.

வேகு நேரம் ஆனது தியானம் முடிந்து, சீடன் கண்களை திறந்து பார்த்தான் .

குருவின் பக்கத்தில் அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்தது.

சீடன், குரு விழித்ததும் அவரிடம் கேட்டான், எப்படி குருவே கோவமாக உருமிக்கொண்டு வந்த புலி அமைதியானது.

 "நாம் நம்மை சுற்றி, எவ்விதமான அலையை பறப்புகிறோமோ நம்மிடம் வருபவர்களும் , நம்மை சுற்றி இருப்பவர்களும், அது போலவே மாறிவிடுவார்கள்" என்று கூறினார் அந்த குரு .

எனவே நம்மை சுற்றி, நல்ல எண்ணங்களையே எண்ணுவோம் , மனதை அமைதியான நிலையிலேயே வைத்துக் கொள்வோம் .

நம்மைச் சுற்றி இருப்பவர்களும், நல்லவர்களாகவே இருப்பார்கள் .

Post a Comment

0 Comments