மாதவிடாய்க் காலத்தில் வயிற்று வலியா ? வெந்தயத்தை வறுத்து இடித்துப் பொடி செய்து அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி , வயிற்று வலி நீங்கும் .
பௌத்திரம் குணமாக .. குப்பை மேனிச் செடியின் வேரைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டு களாக நறுக்கி வெயிலில் காய வைத்து இடித்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொண்டு சிட்டிகைப் பொடியை பசு வெண்ணெயில் குழப்பி காலை , மாலை சாப்பிட்டு வர குறையும் . உணவில் காரம் , புளி சேர்க்கக் கூடாது , மோர் சாதம் சாப்பிடலாம்
எக்ஸிமாதொல்லையா ? கேரட்டை அவித்து அரைத்து எக்ஸிமா படையின் மீது பற்று போட்டு வர சில நாள்களில் எக்ஸிமா காய்ந்து விடும் .
மஞ்சள் காமாலையா ? மஞ்சள் காமாலைக்கும் பால் இயல் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு . பி - வைரஸ் தாம்பத்திய உறவு மூலம் பரவக் கூடியது . மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது .
தாய்ப்பால் சுரக்க ... இலுப்பை இலையை இலேசாக நெருப்பில் வதக்கி மார்பில் வைத்துக் கட்டிக் கொள்ள , அதன் பிறகு பால் நன்கு சுரக்கத் தொடங்கி விடும் . உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட்டு வர தாய்ப்பால் தட்டுப்பாடு வராது ,
மூட்டுகளில் வலியா ? மூட்டுகளில் வீக்கமும் வலியும் இருந்தால் வெந்நீரில் எப்சம் உப்பைக் கலந்து தினமும் வலியுள்ள இடத்தில் தேய்த்துக் கழுவி வர வலி குறையும் . எண்ணெய் தடவி வர வீக்கம் வடியும் .
கண் கூசுகிறதா ? முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்துப் பாலில் கலக்கிச் சாப்பிட வேண்டும் . பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும் தினசரி காட்லிவர் ஆயில் சாப்பிட்டு வர வேண்டும் . இதனால் ண்களுக்கு பலம் உண்டாகும் . வெளிச்சத்தைப் பார்க்கும் சக்தி படைக்கும் .
வயிற்றுப் போக்கு , வாந்தி நிற்க ... நெல்லுப் பொரியை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி கொதிக்க வத்து கஞ்சியாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு , வாந்தி நிற்கும் .
வயிற்றுக் கடுப்பு சரியாக .... பொத்திக் கள்ளி பழத்தை முட்களை நீக்கி சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் ' சாற்றை தேன் கலந்து உள்ளுக்கு சாப்பிட , வயிற்றுக் கடுப்பு குறையும் . உணவில் புளி , கடுகு சேர்க்கக் கூடாது .
படர் தாமரை சரியாக ... வெங்காயம் , கந்தகம் , நவச்சாரம் இவற்றை வகைக்கு 5 கிராம் அளவு இத்து 30 கிராம் வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து காலை , மலை படர் தாமரையின் மீது தேய்த்து வர இரண்டு மூன்று நாள்களிலேயே குணமாகும் ,
நரம்புத் தளர்ச்சி சரியாக ... ஜடா மஞ்சரி வேரின் தூள் 5 கிராம் எடுத்து கால் விட்டர் தண்ணீரில் குறைந்தது ஒரு மனி நேரமாவது ஊற வைத்து அந்த நீரில் ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர தளர்ச்சி குணமாகும் .
தீப்புண்ணுக்கு ... நெருப்புப் பட்டாலும் , சுடு தண்ணீர் கொட்டினாலும் அந்த இடத்தில் கொப்புளம் கிளம்பி புண்ணாகி விடும் . அந்த இடத்தின் தேன் பூசலாம் . அல்லது வாழைப் பட்டையை பிழிந்து அதன் சாற்றைத் தடவலாம் . கொப்புளம் கிளம்பிப் புண்ணாகாது .
தாளிசாதிச் சூரணம் ( IMPCOPS முறை - இந்தியா )
1 . தாளிச பத்திரி 50 கிராம்
2 . மிளகு 100 கிராம்
3 . சுக்கு 150கிராம்
4. திற்பலி 200 கிராம்
5. மூங்கிலுப்பு 50கிராம்
6. கூகை நீறு 200கிராம்
7 . ஏலம் 25கிராம்
8 . கறுவா 25 கிராம்
9. சீனி 1400கிராம்
செய் முறை - மேற் குறிப்பிட்டவற்றுள் சீனியை தவிர்த்து , மீதியை முறைப்படி பொடித்து , சீலையில் அரித்துக்கொள்ளவும் . பின்னர் சீனியை இடித்து முன்னையவற்றுடன் சேர்த்துக் கொள்ளவும் . அளவு - 1- 3 கிராம் வரை தினம் - இரண்டு / மூன்று வேளை அனுபானம் - தேன் / நெய் வெந்நீர்
தீரும் நோய்கள் - இருமல் , இளைப்பு , அரோசகம் , தடிமன் , சுரம் , அக்கினி மாந்தம் ஆகியவை .
குறிப்பு - ( IMPCOPS முறையிலிருந்து சிறு மாற்றம் செய்தது )
தாது விருத்திச் சூரணம் ( கண்ணுச்சாமிப் பரம்பரை வைத்தியம் )
1. நிலப்பனங் கிழங்கு 40 கிராம்
2. சீந்தில் சர்க்கரை 40 கிராம்
3. நெருஞ்சி முள் 40 கிராம்
4. பெரும் பூனைக்காலி வித்து 40 கிராம்
5. நெல்லி வற்றல் 40 கிராம்
6. முள் இலவம் பிசின் 40 கிராம்
7. கற்கண்டு 40 கிராம்
செய் முறை கற்கண்டையும் , சீந்தில் சர்க்கரையும் நீக்கி , மற்றைய ஐந்து சரக்குகளையும் நன்றாய் உலர்த்தி ; நன்கு இடித்துச் சூரணம் செய்து கல்வத்திலிட்டுக் கற்கண்டையும் சீந்தில் சர்க்கரையையும் சேர்த்து அரைத்து மிருதுவான பதத்தில் எடுத்துக் கொள்க , அளவு 500 மி.கி - 1000 மி.கி தினம் - இரு வேளை.
அனுபானம் பசுப்பால் அல்லது பசுநெய் தீரும் நோய் . தாதுப் பலவீனம் பெண்களுக்கும் உபயோகிக்கலாம் , பத்தியம் - இச்சா பத்தியம் , கப உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளவும் .
திரிபலாச் சூரணம் ( பாளையங்கோட்டை சித்த மருத்துவ மனை முறை )
1. கடுக்காய்த் தோல் 1 பங்கு
2. விதை நீக்கிய நெல்லிவற்றல் 1 பங்கு 3. தான்றிக்காய்த் தோல் 1 பங்கு
செய் முறை - சரக்குகளைத் தனித்தனியே இடித்து , ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளவும் . அளவு 1- 2 கிராம் தினம் - இரு | மூன்று வேளை அனுமானம் - பனங்கட்டி | சீனி / வெந்நீர் தீரும் நோய்கள் மலக்கட்டு நீங்கும் ; வாய் கொப்பளிக்க , வாய்ப்புண் மாறும் ; விரணங்களை கழுவவும் உதவும் .
உடல் நலம் 2
April 01, 2021
0
Tags